தருமபுரி

தையல் மகளிர் கூட்டுறவுச் சங்கத்துக்கு ரூ. 1.19 கோடி வழங்கல்

DIN

தருமபுரி மாவட்ட சமூக நலத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தையல் மகளிர் மேம்பாட்டுக் கூட்டுறவுச் சங்கத்துக்கு போனஸ் மற்றும் ஈவுத் தொகைகளான ரூ. 1.19 கோடி வழங்கப்பட்டது.
இந்தத் தொகையை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, தையல் மகளிர் மேம்பாட்டுக் குடிசைக் கூட்டுறவுச் சங்கம் 1987 முதல் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் மூலம் 1266 உறுப்பினர்களுக்கு நவீன தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுவாமிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் எஸ். ரேவதி, தையல் மகளிர் மேம்பாட்டு குடிசைக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜோதி பழனிசாமி, தொழிற்கூட்டுறவு அலுவலர் இரா. மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொது இடத்தில் மோதல்: 7 பேர் கைது
கிருஷ்ணகிரி, ஏப்.22: காவேரிப்பட்டணம் அருகே நிலத் தகராறு தொடர்பாக பொது இடத்தில் மோதலில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணத்தை அடுத்த கரகூரைச் சேர்ந்த பச்சையப்பன், சேகர், அன்பு, ஈஸ்வரன் ஆகியோருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சத்யவாணி, முனியப்பன், குப்பன் ஆகியோருக்கு இடையே நிலத் தகராறு உள்ளதாம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு தரப்பினரும் பொது இடத்தில் மோதலில் ஈடுபட்டனராம். அங்கிருந்தவர்கள் சமரசம் செய்ய முயன்றும், அவர்கள் மோதலில் ஈடுபட்டனராம். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து இரு தரப்பைச் சேர்ந்த பெண் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT