தருமபுரி

நீர்ப்பாசனத் திட்டங்களில் பயன்பெற தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

தினமணி

தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் 8 வட்டங்களிலும் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் ஆகியவற்றில் 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானியத்தில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இதில், 2014-15, 2015-16, 2016-17-ஆம் ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த விவசாயிகளுக்காக ரூ.15.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதி செலவிடப்படாமல் நிலுவையில் உள்ளது.
 தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது வயல்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
 மேலும், 2017-18-ஆம் ஆண்டு 4,800 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்யும் பணி அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 அனைத்து சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளும் நிலத்துக்கான ஆவணங்கள், விவசாயி சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பயனாளியின் புகைப்படம் 3, மண் மற்றும் தண்ணீர் பரிசோதனைச் சான்று, குத்தகை ஒப்பந்தப் பத்திரம் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT