தருமபுரி

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் நோய்த் தாக்குதல்

DIN

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என அரூர் வேளாண்மை உதவி இயக்குநர் கே.முருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நெற்பயிர்களை ஆனைக்கொம்பன் நோய் தாக்கும்போது, நெற்பயிரின் இலைகள் வெள்ளித் தண்டு அல்லது வெங்காயத் தாள் போன்று மாறிவிடும்.
இந்த நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 சதவீதம் குருணை அல்லது பிப்ரோனில் 0.3 சதவீதம் குருணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 10 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
அப்போது, வயலில் உள்ள தண்ணீரை இரண்டு அல்லது மூன்று தினங்கள் வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில், இதற்கு மாற்றாக தயோமீத்தாக்சிம் அல்லது இமிடாகுளோப்ட் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.
நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT