தருமபுரி

"ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பணியாளர் சங்கம் பங்கேற்காது'

தினமணி

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் பங்கேற்காது என சங்கத்தின் பிரசாரச் செயலர் எஸ். சுகமதி தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 அரசு ஊழியர்களுக்கு ஊதியக் குழு வெளியிடும் வரையிலான காலத்துக்கு 25 சதவிகிதம் இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு கூடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த காலங்களில் அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியம் தலைமையில் கூட்டமைப்பில் பெரும் பங்கு வகித்திருக்கிறோம். தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தை ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு புறக்கணித்திருப்பதால், கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்களில் பங்கேற்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

SCROLL FOR NEXT