தருமபுரி

மு.க.ஸ்டாலின் கைதைக் கண்டித்து மறியல்: தருமபுரியில் திமுகவினர் 187 பேர், கிருஷ்ணகிரியில் 302 பேர் கைது

சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து,

தினமணி

சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 187 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பேரவை உறுப்பினர்கள் சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 இதைக் கண்டித்து, தருமபுரி ஒன்றிய திமுக செயலர் சேட்டு தலைமையில் அக்கட்சியினர், நான்கு முனைச் சாலை சந்திப்பில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல, தருமபுரி உள்பட அதியமான்கோட்டை, பென்னாகரம் உள்பட மாவட்டத்தில் 9 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 187 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 கிருஷ்ணகிரியில்...
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்து இடங்களில் நடைபெற்ற மறியலில் 5 பெண்கள் உள்பட 302 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.ஜி. சுகவனம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணித் துணைச் செயலாளர் டேம்.வெங்கடேசன், நகரச் செயலாளர் நவாப் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
 அதேபோல், பர்கூர் பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசன் தலைமையில் 60 பேரும், வேப்பனஅள்ளி பேருந்து நிலையம் அருகில் ஒன்றியச் செயலாளர் ரகுநாத் தலைமையில் 20 பேரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் பத்து இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 302 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 போச்சம்பள்ளியில்...
 திமுக ஒன்றியச் செயலாளர் சந்தமூர்த்தி தலைமையில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வடிவேலன், அரசு, பாண்டியன், ஒன்றிய அமைப்பாளர் எல்லப்பன், மாவட்ட பிரதிநிதி நேதாஜி, அன்பு, மதிகுமரன், தம்பிதுரை, துரை உட்பட 60க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போச்சம்பள்ளி போலீஸார் கைது செய்தனர்.
 ஒசூரில்...
 நகரச் செயலாளர் என்.எஸ். மாதேஸ்வரன் தலைமையில் ஒசூரில் திமுகவினர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாதேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் எல்லோரா.மணி, நகரத் துணைச் செயலாளர் சென்னீரப்பா, இளைஞரணி அமைப்பாளர் ராஜா உள்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
 அரூரில்...
 அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 103 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 ஊத்தங்கரையில்...
 திமுக ஒன்றியச் செயலாளர்கள் எக்கூர் செல்வம், சுவாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
 நகரச் செயலாளர் பாபுசிவக்குமார், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் மருத்துவர் மாலதி நாராயணசாமி, மூன்றம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் குமரேசன்,சிங்காரப்பேட்டை சந்திரன் உள்ளிட்ட 30 பேர் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 30 பேரையும் ஊத்தங்கரை போலீஸார் கைது செய்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT