தருமபுரி

அரூரில் ஜமாபந்தி முகாம்

அரூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

அரூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 அரூர் வருவாய் வட்டத்துக்கான நிகழாண்டின் ஜமாபந்தி முகாமுக்கு கோட்டாட்சியர் ரா.கவிதா தலைமை வகித்தார்.
 இதில் பட்டா மாறுதல், பட்டா உள்பிரிவு செய்தல், முதியோர் உதவித் தொகை, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு வசதிகள், ஏரிகளை தூர்வாருதல், கால்வாய் தூய்மை செய்தல், ஜாதிச் சான்று, திருமணம் மற்றும் கல்வி உதவித் தொகைகள் தொடர்பாக 380 மனுக்கள் பெறப்பட்டன.
 இந்த முகாமில் வட்டாட்சியர் அ.செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சி.கனிமொழி, துணை வட்டாட்சியர் பி.ஜெயச்செல்வன், நில அளவை துணை ஆய்வாளர் வி.குணசேகரன், வருவாய் ஆய்வாளர் ஆ.சிவஞானம், கிராம நிர்வாக அலுவலர்கள் டி.ஆறுமுகம், ஜி.ராமமூர்த்தி, டி.ராமச்சந்திரன், முருகன், வருவாய் உதவியாளர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT