தருமபுரி

மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல், ஓட்டுநர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மணல் கடத்தியதாக புதன்கிழமை 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

தினமணி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மணல் கடத்தியதாக புதன்கிழமை 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.
 அ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளர் ஆ.முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சர்க்கரை ஆலை-தென்கரைக்கோட்டை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மணல் லாரி ஓட்டுநர் ஜெ.கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிரெட்டி மகன் மஞ்சுநாத் (23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ஒசூர் பெரியார் நகரைச் சேர்ந்த ஜெயராம் மகன் பால்ராஜ், ராமகிருஷ்ணன் மகன் தினேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.
 இதையடுத்து, அரசு அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 2 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT