தருமபுரி

அரூர் பெரிய ஏரியில் சீரமைப்புப் பணிகள்

DIN

குடிமராமத்து திட்டம் சார்பில், அரூர் பெரிய ஏரியின் கரைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அரூர் பெரிய ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை தூர்வார வேண்டும், முள்புதர்கள் அடைந்திருந்த ஏரியின் கரைகளை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர்.
 இந்த நிலையில், தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தில் ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது ஏரியின் கரைப் பகுதிகளில் மண்களை கொட்டி சீரமைப்பு பணி மற்றும் முள்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
 தொடர்ந்து, ஏரியின் சுற்றுப் பகுதியில் கரைகளைப் பலப்படுத்த வேண்டும், ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என நாச்சினாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT