தருமபுரி

பள்ளி மாணவர்களுக்கான போட்டி: வென்றோர் விவரம்

DIN

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வென்றோர் விவரங்களை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் ம.சி.தியாகராசன் அறிவித்துள்ளார்.
கவிதைப் போட்டியில் அரூர் செல்வசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் க.ஹரிஹரன் முதல் இடமும், வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.சங்கவி இரண்டாம் இடமும், பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மா.மனோஜ்குமார் மூன்றாம் இடமும் பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில் வெங்கட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி இரா.கற்பகசெல்வி முதல் இடமும், பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மா.பாபு இரண்டாம் இடமும், நரிப்பள்ளி ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் மு.சபரிநாதன் மூன்றாம்  இடமும் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில் பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மு.ஜீவா முதல் இடமும், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் மு.சதீஷ்குமார் இரண்டாம் இடமும், இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கு.பாலமுருகன் மூன்றாம் இடமும் பெற்றனர்.
முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
கவிதைப் போட்டிக்கு கோ.மலர்வண்ணன், இரா.சுதா, கு.மாதையன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர். கட்டுரைப் போட்டிக்கு கோ.சக்திவேல், வெ.வெண்ணிலா, மு.முனியப்பன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பேச்சுப்போட்டிக்கு ப.கோவிந்தராசு, மு.பரமசிவம், ந.அமுதா ஆகியோரும் நடுவர்களாக செயல்பட்டனர்.
முதல் பரிசு பெற்றோர் மட்டும் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி - மதுரை புதன்கிழமை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

SCROLL FOR NEXT