தருமபுரி

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

DIN

பாப்பிரெட்டிப்பட்டியில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
 டெங்கு  ஒழிப்பு,  தூய்மையே சேவை,  புளூவேல் விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி.கார்த்திகேயன் தொடக்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் பிரிவில் ஆர். மகேந்திரன்,  கல்லூரி மாணவர் பிரிவில் டி.சுரேஷ்குமார்,  டி.அஜித்,  கே.ராஜா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். மாரத்தான் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் பி.கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார். இதில் உடற்கல்வி இயக்குநர் க.வெங்கடாசலம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT