பகுத்தறிவாளர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம்
பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அரூர் வர்ணதீர்த்தம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அரூர் வர்ணதீர்த்தம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் இளைய. மாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.காமராஜ் வரவேற்றார்.
பாப்பிரெட்டிப்பட்டியில் மே 15-இல் நடைபெறும் தி.க மாநாட்டில் பங்கேற்கும் கி.வீரமணியின் வருகை குறித்தும், கனியூர், பொன்னேரியில் நடைபெறும் மாநாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
தி.க. மாநில அமைப்பாளர் உரத்தநாடு ரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலர் ஊமை. ஜெயராமன், மகளிரணி மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திமுக ஆதிதிராவிடர் நலத்துறை மாநிலத் துணைச் செயலர் சா.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச்செல்வன், இனமுரசு கோபால், கையிலை ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.