தருமபுரி

கொங்கு கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

DIN

மொரப்பூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இயற்பியல் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் டி. சந்திரசேகர் தொடக்கி வைத்தார். சூரிய மின்சாரத்தின் பயன்பாடு, தேவைகள், உற்பத்தி செய்யும் முறைகள், இயற்பியல்துறையின் புதிய தொழில்நுட்பங்கள், புதிய மூலக்கூறுகளைப் பயன்படுத்தி புதிய படிமத்தை உருவாக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பேராசிரியர்கள் எஸ்.வி.எம்.சத்யநாராயணா, எம்.மணிகண்டன், ரா.ராபர்ட் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 60-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர்.
இதில், கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலர் அ.மோகன்ராசு, பொருளாளர் பி.வரதராஜன், தாளாளர்கள் செ.தீர்த்தகிரி, கே.இளங்கோ, கல்லூரி முதல்வர் நா.குணசேகரன், துணை முதல்வர் க.சீனிவாசன், பேராசிரியர்கள் கே.கோவிந்தராசு, எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT