தருமபுரி

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கருத்தரங்கு

DIN

மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
மத்திய அரசின் ஆட்சி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்கள் வஞ்சிக்கப்பட்ட நாள் என்கிற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை வகித்து பேசியது:
மத்திய அரசின் ஜிஎஸ்டி, உயர் மதிப்பு பணத்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் விரோத திட்டங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய பாஜக அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் மக்கள் துயங்களையே அதிகம் சந்தித்துள்ளனர். பொதுவாக இந்த நாள் மத்திய அரசால் மக்கள் வஞ்சிக்கப்பட்ட நாள் என்றார்.
நகரத் தலைவர் செந்தில் குமார், முன்னாள் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், இளங்கோவன், நிர்வாகிகள், கனகராஜ், கெளதம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT