தருமபுரி

சூரிய சக்தியில் மின் உற்பத்தி பயிற்சி

DIN

பாலக்கோடு அருகே காடையாம்பட்டியில் வேளாண்துறை சார்பில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 
பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பூ. சு. சித்ரா தலைமை வகித்து வேளாண் துறையில் உள்ள மானியத் திட்டங்கள் மற்றும் பிரதமரின் பயிர் காப்பீடு செய்வது குறித்து எடுத்துரைத்தார். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மு. சிவசங்கரி வரவேற்றுப் பேசினார்.
வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் செல்வகுமார், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது மற்றும் பராமரிப்பு முறைகள், அதன் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். பயிற்சியில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் அருள்குமார் மற்றும் அப்பகுதி விவசாயிகள், வேளாண் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT