தருமபுரி

செம்மனஅள்ளியில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

DIN

பாலக்கோடு வட்டம், திருமல்வாடி அருகேயுள்ள செம்மனஅள்ளியில் வெள்ளிக்கிழமை புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடை திறக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவர் எச்.ரகமத்துல்லாகான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செம்மனஅள்ளியில் பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்து பேசியது: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக குடியிருப்புப் பகுதிகள் மலைப் பிரதேசங்களில் உள்ளதால், புதிய நியாய விலைக் கடைகள் தொடங்க உருவாக்கப்பட்ட விதிகளை தளர்த்தி 2005-ஆம் ஆண்டு தமிழக அரசு புதிய அரசாணை
வெளியிட்டது.
இதன் அடிப்படையில், நியாய விலைக் கடைகளுக்கு நீண்ட தூரம் சென்று பொருள்கள் வாங்கிவரும் நிலை மாற்றப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு தரமான அரிசியை வழங்கி வருகிறது என்றார்.
சார்-ஆட்சியர் ம.ப.சிவனருள், மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி, வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம், கூட்டுறவு சார்-பதிவாளர் ராஜதுரை, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கே.வி.ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT