தருமபுரி

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

DIN

அரூரை அடுத்த கீரைப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டட வசதியில்லாததால், ஊராட்சி மன்ற அலுவலக பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அரூர் வட்டம், கீரைப்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 2014-ஆம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இதில் 2 அரசு மருத்துவர்கள், 3 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல், பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் தாய்மார்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
ஊராட்சி மன்றக் கட்டடத்தில் மருத்துவமனை: கீரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக அந்த ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பழைய கட்டடத்தில் தொடங்கப்பட்டது. தற்போது, அதே வளாகத்தில் மருத்துவமனை அமைக்க தேவையான இடவசதி இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான கட்டட வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டுவதற்காக ஏற்கெனவே அரசு சார்பில் சுமார் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  கீரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ள இடமானது கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமானதாகும். அரசு மேய்ச்சல் புறம்போக்கு  நிலமாக இருப்பதால், இந்த இடத்தை கால்நடை பராமரிப்புத் துறையினர் சுகாதாரத் துறையினருக்கு ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை தொடங்க
முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும்: தற்போது, தற்காலிகமாக இயங்கி வரும் கீரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கால்நடை கிளை மருந்தகம் உள்ளது. அதேபோல், பொதுக் கழிப்பிடக் கட்டடமும் உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் போதிய சுகாதாரம் இல்லாமல் உள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலையுள்ளது.
எனவே, கீரைப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான கட்டட வசதிகளையும், கூடுதல் மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT