தருமபுரி

கொங்கு கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

DIN

மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கொங்கு கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கினை கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் டி.சந்திரசேகர் தொடக்கி வைத்தார்.
வணிகவியல் துறையில் உள்ள புதிய ஆராய்ச்சி படிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் குறித்து பேராசிரியர்கள் எஸ்.வெங்கடேசன், எம்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த கருத்தரங்களில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர்.
இதில், கொங்கு கல்வி நிறுவனங்களின் செயலர் அ.மோகன்ராசு, பொருளாளர் பி.வரதராஜன், தாளாளர்கள் செ.தீர்த்தகிரி, கே.இளங்கோ, கல்லூரி முதல்வர் நா.குணசேகரன், துணை முதல்வர் க.சீனிவாசன், பேராசிரியர் வி.கோவிந்தராஜ், உதவிப் பேராசிரியர் வி.சுதா, கல்வி அறக்கட்டளையின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT