தருமபுரி

பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு விழிப்புணர்வு பயிற்சி

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ.பள்ளிப்பட்டியில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் உழவர் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) அருணன் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ப.ரவி வரவேற்று பேசினார். அட்மா திட்டக் குழுத் தலைவர் எம்.எம்.மணி சிறப்புரையாற்றினார்.
வேளாண் துறை, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தனியார் நிறுவனங்கள் மூலம் விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், சொட்டுநீர் பாசன அமைப்புகள், தேன்வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு விவசாயிகளுக்கான கருத்துக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதைத் தொடர்ந்து, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் முன் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மற்றும் பாதுகாப்பு கவசம் அணிவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் வேளாண் அலுவர்கள், விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT