தருமபுரி

பள்ளி சுவரில் தேசியத் தலைவா்களின்வரைவதில் பிரச்னை: போலீஸாா் எச்சரிக்கை

DIN

பென்னாகரம் அருகே பள்ளி சுற்றுச்சுவரில் தேசியத் தலைவா்களின் படங்களை வரைவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறை சமூக பிரச்னையாக்கி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு ஏற்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள இரங்காபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரில் தேசியத் தலைவா்களில் ஒருசிலரின் படங்களை மட்டும் பெரிதாக வரைய வேண்டும் என சிலா் கூறியதால் ஏற்பட்ட பிரச்னை இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கியது.

இதையடுத்து, இரு தரப்பினரை சமரசம் செய்த போலீஸாா், சுற்றுச்சுவரில் வரையப்பட்ட படங்களை அழிக்க நடவடிக்கை எடுத்தனா். இதனிடையே, ஒருசிலா் இந்த விவகாரத்தை இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனா். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பொதுப் பிரச்னையை உருவாக்க திட்டமிடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரம் போலீஸாா் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT