தருமபுரி

பிப்.25-இல் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் தேர்த் திருவிழா

DIN

அரூரை அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமகம் திருத்தேர்த் திருவிழா பிப்ரவரி 25-இல் (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டம், அரூர் - திருவண்ணாமலை சாலையில், 13-ஆவது கிலோ மீட்டரில் தீர்த்தமலையில் அமைந்துள்ளது அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்.
ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில், முதல்கால பூஜையை ராமேசுவரத்திலும், இரண்டாம் கால பூஜைக்காக தீர்த்தகிரி மலை மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தை கொண்டும் பூஜைகளை முடித்தார்.
தீர்த்தமலையில் எக்காலத்திலும் வற்றாத தீர்த்தமே ராமர் தீர்த்தம் எனும் புண்ணியத் தீர்த்தமாகும். இங்குள்ள மலையும் தீர்த்தகிரி மலை என்று அழைக்கப்படும் புண்ணிய மலையாகும்.
ஸ்ரீ ராமர், பார்வதி தேவி, குமரக்கடவுள், அக்னி தேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம் செய்து பாவம் விமோச்சனம் பெற்ற தலம் இந்தத் திருத்தலம் ஆகும். தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளிய ஒரே திருத்தலம் தீர்த்தகிரி மலை ஆகும். 
வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்  பிப்ரவரி 25-ஆம் தேதி, திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. 
இதையடுத்து, மாசிமகம் திருத்தேர்த் திருவிழாவின் திருக்கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை 12 மணியளவில் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் சனிக்கிழமை (பிப்.23) சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பிப்.28-ஆம் தேதி வரையிலும் தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் சார்பில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
மாசிமகத் திருத்தேர் திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.நித்யா, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) எம்.திருஞானசம்பந்தர், திருக்கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT