தருமபுரி

நெகிழிப் பொருள்களின் தீமைகள்: விழிப்புணர்வு ஊர்வலம்

அரூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களின் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

DIN

அரூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களின் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்கள் கடைகள், பல்பொருள் அங்காடிகள், அடுமனைகள், உணவகங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நெகிழிப் பொருள்களை பொதுமக்கள் நிலத்தில் வீசி எறிவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதுடன், மண் வளம் பாதிக்கிறது. இதையடுத்து, நம்பிப்பட்டி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னை கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் 300-க்கும் மேற்பட்டோர், நெகிழியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு முழக்கங்களுடன் ஊர்வலம் சென்றனர். அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, வர்ணதீர்த்தம், பேருந்து நிலையம், கடைவீதி, பாட்சாபேட்டை, 4 வழிச் சாலை, திரு.வி.க. நகர் வழியாக  இந்த  ஊர்வலம் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT