தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 1336 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கல்

DIN

தருமபுரி மாவட்டத்தில்,  நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய வட்டாரங்களில் சமூக நலத்துறை சார்பில் 1,336 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம், ரூ.4.95 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி  ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி சார் -ஆட்சியர் ம.ப.சிவன்அருள் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:  தருமபுரி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 2,500 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில், வரும் காலங்களில் 8 கிராம் தாலிக்குத் தங்கம், ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவி பெறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்திட பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில வேண்டும். பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு தலா ரூ.1000 வழங்க ரூ.2,020 கோடி,   பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.258 கோடி,   வேட்டி சேலைகள் வழங்க ரூ.400 கோடி என  மொத்தம் ரூ.2,678 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
இவ் விழாவில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) கு.நாகலட்சுமி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், வட்டாட்சியர்கள் வெங்கடேஸ்வரன், கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம்,  தனபால், வடிவேலன், வெங்கட்டரமணன், விமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT