தருமபுரி

மொரப்பூர் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையத்தில் சபரி விரைவு ரயில், ஏற்காடு விரைவு ரயில், கோவை விரைவு ரயில் உள்பட 10-க்கும் மேற்பட்ட ரயில் வண்டிகள் நின்று செல்கின்றன. சென்னை, கோவை, கேரளம், ஆந்திரம், திருநெல்வேலி, திருப்பதி, கர்நாடகம், காட்பாடி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் ரயில் பயணிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் மொரப்பூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.
ஆனால், இந்த ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பிடக் கட்டடங்கள் பழுதான நிலையில் பூட்டியே உள்ளன. கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் பல்வேறு இன்னல்களை அடைகின்றனர். இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பயணிகள் புகார் கூறுகின்றனர். எனவே, மொரப்பூர் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

நிர்மலாதேவி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் விடுதலை

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

SCROLL FOR NEXT