தருமபுரி

ஆம்புலன்ஸ் ஓட்டுநரைதாக்கிய இளைஞர் கைது

DIN


அரூர் அருகே 108 ஆம்புலனஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அரூர் வட்டம், கௌôப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜு மகன் பாஸ்கர் (38) கோட்டப்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், 17-ம் தேதி, கௌôப்பாறையில் உள்ள வரட்டாற்று பகுதியில் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டனராம். அப்போது, இளைஞர்களை பாஸ்கர் சமாதானம் செய்தாராம். இதில், ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் பாஸ்கர் மீது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினராம். காயமடைந்த பாஸ்கர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கௌôப்பாறை கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து மகன் அருள் (29) என்பவரைக் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் தெய்வம் (32), ராஜா மகன் பிரபாகரன் (25), சிவாஜி மகன் பூவரசன் (25) ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT