தருமபுரி

தீர்த்தமலையில் சாலையை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

DIN

தீர்த்தமலையில் கோயிலுக்கு செல்லும் மண் சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரூர்-திருவண்ணாமலை சாலையில் 13-ஆவது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தீர்த்தமலை பேருந்து நிலையத்தில் இருந்து தேரடி வீதி வழியாக தீர்த்தகிரீஸ்வரர் மலைக் கோயிலுக்கு செல்லும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள மண் சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனம், கார், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லவும் பல்வேறு இன்னல்களை அடைகின்றனர்.
எனவே, தீர்த்தமலை பேருந்து நிலையத்தில் இருந்து மலைக்கோயில் வரையிலும் உள்ள மண் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரல் மாதிரியை பயன்படுத்தி புதிய வகை மோசடி: மின் வாரியம் எச்சரிக்கை

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

SCROLL FOR NEXT