தருமபுரி

பஞ்சப்பள்ளி அரசு பள்ளியில்206 மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கல்

DIN


தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 206 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசியது: தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு உயர்கல்வி பெறுவோரின் சதவீதம் 98.41-ஆக உள்ளது. பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.10 கோடியில் கட்டங்கள் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.20 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் இந்த திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது என்றார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லாகான், தருமபுரி சார்- ஆட்சியர் ம.ப.சிவன் அருள், முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன், பள்ளித் தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT