தருமபுரி

மண்டல அலுவலர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்பாடு பயிற்சி

DIN

தருமபுரியில் மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற இப் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி பேசியது: தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப். 18-இல் நடைபெற உள்ளது.
இதில், இடைத்தேர்தல் நடைபெறும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் 2 வாக்குகள் செலுத்திட வேண்டும். வாக்காளர்கள் அடையாள அட்டை, தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 சான்றிதழ்களை காண்பித்து வாக்களிக்கலாம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து மண்டல அலுவலர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று, வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கிட வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், அரூர் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் இரா.கீர்த்தி பிரியதர்ஷினி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கு அழைப்பு

திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

பணம் கொடுத்து வாக்கு பெறும் பாஜக: மம்தா பானா்ஜி

வங்கியில் நகைகள் திருட்டு வழக்கு அலுவலா்கள், போலீஸாரிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

வழிபாட்டுத் தலங்கள் புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் புதிய நடைமுறைகள் -கே.எம். காதா்மொகிதீன் வரவேற்பு

SCROLL FOR NEXT