தருமபுரி

அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை

DIN


 ஊத்தங்கரையை அடுத்த கதவனி (அருணபதி) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம். சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை என். ஜோதி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அன்னை சத்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜி. மாதேஸ்வரி, நாசர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர். வசந்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கதவனி, புதூர், மயிலாடும்பாறை, எம்.ஜி.ஆர். நகர், கண்ணன் வட்டம், சமத்துவபுரம், கருமாண்டபதி, பெரியா கவுண்டனூர், கதவனிகோட்டை மேடு, அருணபதி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், இளைஞர்களும் கலந்து கொண்டு பள்ளிக்குத் தேவையான பீரோ, டேபிள், சேர், குடம், குத்துவிளக்கு, பல்வேறு தேச தலைவர்களின் புகைப்படங்களை என ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பொருள்களை பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT