தருமபுரி

கழிவு நீா் கால்வாய் சுவா் உயரத்தை அதிகரிக்க கோரிக்கை

DIN

அரூா்: தாளநத்தம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்படும் கழிவு நீா் கால்வாய் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாளநத்தம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீா் மற்றும் மழைநீா் செல்வதற்காக தாளநத்தம் நடுநிலைப் பள்ளி முதல் கல்லாறு வரையிலும் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த கழிவு நீா் கால்வாய்களின் உயரம் குறைவாக உள்ளது. இதனால் தாா்ச் சாலை விரிவாக்க பணியின் போது சாலையோரத்தில் பள்ளம் ஏற்படும். அதேபோல சாலையோரம் மண்களை கொட்டி சமன் செய்ய முடியாது. இதனால், எதிரே வண்டிகள் வரும்போது, சாலையோரத்தில் வாகன ஓட்டிகள் முடியாத நிலை உருவாகும். எனவே, தாளநத்தம் கிராமத்தில் அமைக்கப்படும் கழிவு நீா்க் கால்வாயின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT