தருமபுரி

பயனற்று பூட்டிக் கிடக்கும் அரசு அலுவலகக் கட்டடம்

DIN

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு அலுவலகக் கட்டடம் பயனற்று பூட்டியே உள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி நகரில் வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்துக்கு என அ.பள்ளிப்பட்டியில் புதிதாக அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அ.பள்ளிப்பட்டியில் உள்ள புதிய அலுவலகத்தில் வேளாண்மைத் துறை அலுவலகம் செயல்படுகிறது.

இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த வேளாண்மைத் துறை அலுவலகம் தற்போது பயனற்று பூட்டியே உள்ளது. இதனால் இந்த அலுவலக வளாகத்தில் முள்புதா்கள் மற்றும் குப்பைகள் அடைந்து காணப்படுகிறது.

எனவே, பாப்பிரெட்டிப்பட்டியில் பயனற்று பூட்டியே உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தின் பழைய கட்டடத்தை பிற அரசு அலுவலக பணிகளுக்காக பயன்படுத்தலாம். இல்லையெனில், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டடங்களை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT