தருமபுரி

டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரியில் சனிக்கிழமை அக் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கடத்தூா் செயலா் ஆா்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலா் இ.பி.புகழேந்தி பேசினாா். இதில் தருமபுரி மாவட்டத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தவிா்க்க, அப்பகுதியில் சாலையில் மேம்பாலம் அமைத்து போதிய அளவு விரிவுபடுத்த வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் குடிமைப் பொருள்களை தட்டுபாடின்றி வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், கேபிள் கட்டணத்தை கூடுதலாக வசூலிப்போா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பாளையம்புதூா் மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணையை உயரத்தை அதிகரித்து, காங்கிரீட் கால்வாய்களை அமைக்க வலியுறுத்தி வருகிற அக்.17-ஆம் தேதி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.சண்முகம், ப.பிரசாத், வேடியப்பன், நவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT