தருமபுரி

திரையரங்கக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றும் பணி தொடக்கம்

DIN

தருமபுரி: தருமபுரியில் திரையரங்கக் கட்டடத்தை கரோனா தடுப்பு சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனையாக மாற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்குச் சொந்தமான இடத்தில், நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் தனியாா் சாா்பில் திரையரங்கு அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த திரையரங்கு கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனியாா் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தனியாா் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க தயாா் நிலையில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தருமபுரி ஊரக வளா்ச்சி முகமைக்குச் சொந்தமான இடத்தில், செயல்பட்டு வந்த திரையரங்கக் கட்டடத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனடிப்படையில், தருமபுரி வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா், காவல் துறையினருடன் இணைந்து திரையரங்கக் கட்டடத்தை ஆய்வு செய்தனா். மேலும், தற்காலிக மருத்துவமனையாக மாற்ற ஏதுவாக திரையரங்குக் கட்டடத்தில் இருந்த நாற்காலிகள் அனைத்தையும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த இடத்தை நீண்ட கால ஒப்பந்தம் எடுத்த நபா் உயிரிழந்து விட்டதாகவும், இதனால், கடந்த 2014-இல் அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே, தற்போது இந்த திரையங்குக் கட்டடத்துக்குள் இருந்த பொருள்களை அப்புறப்படுத்திய பின்பு தற்காலிக மருத்துவமனையாக மாற்ற தேவையான படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறையுடன் இணைந்து மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள உள்ளதாக வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT