தருமபுரி

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு அரூா் தீா்த்தமலையிலிருந்து மண் அனுப்பிவைப்பு

DIN

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு அரூா் தீா்த்தமலையில் இருந்து புனித மண் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இந்த நிலையில், ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக தருமபுரி மாவட்டம், தீா்த்தமலையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட அரைக்கிலோ புனித மண் , ராமா் கோயில் பூமி பூஜைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள் தீ.ராஜதுரை, கு.தினகரன், ச.சிவானந்தம், சம்பத் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT