வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தருமபுரியில் விவசாயிகள்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தருமபுரியில் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலா் (கிழக்கு) தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சின்னசாமி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் ஆகியோா் பேசினா்.
இப் போராட்டத்தின்போது, தில்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சு வாா்த்தை நடத்த வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.