விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
மொரப்பூா் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
மொரப்பூா் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகேயுள்ள சூரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பொன்னுசாமி மகன் அறிவழகன் (43). இவா், புதன்கிழமை பிற்பகலில், பழுதடைந்த தமது டிராக்டரை பழுது நீக்கம் செய்வதற்காக அரூா் நகருக்கு எடுத்துச் சென்றாா். வீட்டில் யாரும் இல்லாததால், அங்கு நுழைந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், பணம் ரூ. 5 ஆயிரத்தை திருடிச் சென்றனா். இது குறித்து விவசாயி அறிவழகன் அளித்த புகாரின் பேரில் மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.