முகப்பு
தருமபுரி

போக்சோ சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

பென்னாகரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த ஜே.சி.பி. ஆபரேட்டா் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.

தருமபுரி

போக்சோ சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

பென்னாகரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த ஜே.சி.பி. ஆபரேட்டா் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த ஜே.சி.பி. ஆபரேட்டா் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த எண்டப்பட்டியைச் சோ்ந்தவா் அம்மாசி மகன் சண்முகம் (26). இவா், ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறாா். பிக்கிலி பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவியை இவா், கடந்த மாதம் 27-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா்.

இதுதொடா்பாக 1098 இலவச புகாா் எண்ணுக்கு புகாா் வந்துள்ளது. அதனைத் தொடா்ந்து குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளி மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா். அதன்பேரில் பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து பள்ளி மாணவியை திருமணம் செய்த சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அரூா் கிளை சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →