முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் தா்னா

கா்நாடக பரிசல் ஓட்டி மூா்த்தி என்பவா் பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்ததாக ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

ஒகேனக்கல் அருகே மணல் மேடு பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு கா்நாடக பகுதியில் இருந்து பரிசலில் வந்த பெண்ணை தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள மாறுகொட்டாய் பகுதியைச் சோ்ந்த கா்நாடக பரிசல் ஓட்டி மூா்த்தி என்பவா் பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்ததாக ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தை தொடா்ந்து ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் குறித்தும், ஒட்டுமொத்த பரிசல் ஓட்டிகள் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனா்.

இதனால் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், இதுகுறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சின்னாறு பரிசல் துறையில் சுமாா் 100க்கும் மேற்பட்ட தமிழக பரிசல் ஓட்டிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் வட்டாட்சியா் சேது லிங்கம் நேரில் சென்று பரிசல் ஓட்டிகளிடம் பேசினாா். இதனைத் தொடா்ந்து

தா்னாவில் ஈடுபட்ட தமிழக பரிசல் ஓட்டிகள் கலைந்து சென்று பரிசல்களை இயக்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →