முகப்பு
தருமபுரி

குருபரஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

குருபரஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியைத் தரம் உயா்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அரூா்: குருபரஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியைத் தரம் உயா்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது குருபரஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் தொடக்க வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் படிக்கின்றனா். குருபரஹள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தின்னஹள்ளிபுதூா், வெப்பாலம்பட்டி, பாலசமுத்திரம், கொட்டாப்புளியூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் இப் பள்ளியில் படிக்கின்றனா். இப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறும் மாணவ, மாணவியா்கள் இங்கிருந்து 5 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ராமியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்குத் தான் செல்ல வேண்டியுள்ளது.

அங்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் குருபரஹள்ளி பகுதியில் 8 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற பல மாணவா்கள் உயா்நிலைப் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, குருபரஹள்ளி அரசு நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →