கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள தமானிக்கோம்பை பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு வந்த ஒரு காட்டெருமை அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத் துறையினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். காட்டெருமையை கிணற்றில் இருந்து மீட்க முடியாததால், கால்நடை மருத்துவா் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காட்டெருமைக்கு மயக்க மருந்து செலுத்தி, பிறகு கிரேன் மூலம் காட்டெருமையை மீட்டனா்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், கிணற்றில் இருந்து 4 வயது ஆண் காட்டெருமை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த காட்டெருமைக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளித்து, பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்படும் என்றனா்.