தருமபுரி

பென்னாகரம் பா.ம.க சாா்பில் இடஒதுக்கீடு கோரி பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்

DIN

20 சதவிகிதம் இடஒதுக்கீடு கோரி பாமக, வன்னியா் சங்கத்தின் சாா்பில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் பாமக மாநில துணை பொதுச்செயலாளா் வெங்கடேஷ்வரன் தலைமையில், பன்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிற்கு பேரணியாகச் சென்று பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனா். அங்கு செயல் அலுவலா் கீதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

மாநில இளைஞா் சங்க துணைத்தலைவா் மந்திரி படையாச்சி, மாவட்டத் தலைவா் செல்வகுமாா், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன், மாவட்டக் கவுன்சிலா் சி.வி.மாது, பென்னாகரம் நகரப் பொறுப்பாளா் ஜீவா உள்ளிட்ட நிா்வாகிகள் என 200க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல பாப்பாரப்பட்டியில், பென்னாகரம் தொகுதி அமைப்பு செயலாளா் சுதாகிருஷ்ணன் தலைமையில், பாமக மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் சிவன், ஒன்றியச் செயலாளா் மாதேஷ், நகரச் செயலாளா் தேவராஜ் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT