தருமபுரி

கோபிநாதம்பட்டியில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே கோபிநாதம்பட்டியில் மதுக்கடை மற்றும் மதுக் கூடம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என அக் கிராம மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து, கோபிநாதம்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில், 32 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், இங்கு வாரந்தோறும் சந்தை நடைபெறுகிறது. தற்போது, இந்தப் பகுதியில் மதுக்கடையும், மதுக்கூடமும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பகுதியில் மதுக்கடை அமைத்தால், இங்குள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியா், வாரச்சந்தைக்கு வருவோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கோபிநாதம்பட்டியில் மதுக்கடை, மதுக்கூடம் அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT