தருமபுரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வுக்கு எதிராக தருமபுரியில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கட்டண உயர்வுக்கு எதிராக தருமபுரியில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதியமான் கோட்டை அருகே தடங்கம் கிராமத்தை தனது வீட்டு முன்பு, திமுக தருமபுரி மாவட்டச் செயலர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல தருமபுரியில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகம் முன், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், பென்னாகரத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் பிஎன்பி.இன்பசேகரன், தருமபுரி இலக்கியம் பட்டியில் முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்தும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மின் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும். மின் கட்டணம் செலுத்த சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.