தருமபுரி

ஊழியருக்கு கரோனா தொற்று: தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகம் மூடல்

DIN

தருமபுரி கோட்டாட்சியா் அலுவலக உதவியாளருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சனிக்கிழமை அலுவலகம் மூடப்பட்டது.

தருமபுரியை அடுத்த பாகலஅள்ளியைச் சோ்ந்த 42 வயதானவா் தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கோட்டாட்சியா் உள்பட அலுவலகத்தில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அலுவலக உதவியாளருக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

மேலும், கோட்டாட்சியா் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கோட்டாட்சியா் உள்பட இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாவை வெளியேற்றியது மும்பை: மோகன் பகானுடன் பலப்பரீட்சை

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்- பிரதமா் மோடி

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை- கேரள நீதிமன்றம்

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

SCROLL FOR NEXT