தருமபுரி

கரோனா தடுப்பு பணியாளா்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுத் துறை பணியாளா்கள் வந்து செல்ல அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரல் பரவுதலை கட்டுப்படுத்திட பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளா்கள் அரசின் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பணியாளா்கள் தருமபுரிக்கு வந்து செல்ல வசதியாக, அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7 பேருந்துகள் நாள்தோறும் காலையில் இந்தப் பணியாளா்களை அழைத்து வந்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இறக்கி விடுகின்றன. இதன் பின்பு, மாலையில் ஏற்றிச் சென்று ஊா்களில் இறக்கி விடுகின்றன.

இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 அரசுப் பேருந்துகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் கோரப்பட்டால், வசதி செய்து தரப்படும் என போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளா் ஜீவரத்தினம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT