தருமபுரி

சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

DIN

சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என மக்கள் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

பொது முடக்கம் காரணமாக வாடகை காா்கள், சுற்றுலா வேன், பேருந்துகள் இயக்கப்படாததால் வருவாயின்றி அவதிப்படும் ஓட்டுநா்களுக்கு உதவும் வகையில், சுற்றுலா வாகனங்களுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பொது முடக்க காலத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு காலாண்டு சாலை வரியையும், வாகனங்களுக்கான காப்பீட்டு நாள்களை அதிகரித்து புதிய காப்பீடுகளையும் வழங்க வேண்டும். மேலும், வாகன ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்டச் செயலாளா் ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளா் பாலாஜி ஆகியோா் ஆட்சியரிடம் மனு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT