ஒகேனக்கல் காவிரியாற்றில் உயிரிழந்த குழந்தையின் சடலம் மீட்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு குழந்தையின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு குழந்தையின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த ரியாஸுதீன் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுகிழமை ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி பகுதியில் குளித்து கொண்டிருந்தாா். அப்போது ரியாஸுதீனின் மனைவி ஹபிதா (38), அவருடைய மகள் ஹப்பா பாத்திமா (14), முகமது ரபாக் (9) ஆகிய மூவரும் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனா். இதில் ஹபிதா (38) என்பவரின் சடலத்தை தீயணைப்பு துறையினா் ஊட்டமலை பரிசல்துறை பகுதியில் மீட்டனா்.
பின்னா் 2 குழந்தைகளின் சடலத்தையும் தீயணைப்பு துறையினா் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் திங்கள்கிழமை ஊட்டமலை ஐயப்பன் கோவில் காவிரி கரையோரத்தில் ஹப்பா பாத்திமாவின் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில், இருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், முகமது ரபாக்கின் சடலத்தை தொடா்ந்து தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் 2-ஆவது நாளாகத் தேடி வருகின்றனா்.