முகப்பு
தருமபுரி

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

அரூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலருக்கு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

அரூா் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலருக்கு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அரூா் வட்டம், செக்காம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் ராஜேஷ்கண்ணா (30). இவா் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் வாராந்திர பயிற்சியில் பங்கேற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில், சனிக்கிழமை விடியற்காலை 4.30 மணியளவில் அரூா்-மொரப்பூா் சாலையில், தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

சேவா கிராமம் எனுமிடத்தில் நடைபெற்ற விபத்தில் காவலா் ராஜேஷ் கண்ணா படுகாயம் அடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை உயிரிழந்தாா்.

21 குண்டுகள் முழங்க காவல் துறையினா் மரியாதை :

உயிரிழந்த காவலா் ராஜேஷ்கண்ணா உடலுக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், அரூா் டிஎஸ்பி வி.தமிழ்மணி, காவல் ஆய்வாளா் பி.லட்சுமி, உதவி காவல் ஆய்வாளா்கள் மாதையன், கமலநாதன், தனிப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ஏ.முருகன் உள்ளிட்ட காவல் துறையினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். காவலா் ராஜேஷ்கண்ணா உடலுக்கு தருமபுரி நகா் டிஎஸ்பி ஜி.அண்ணாதுரை தலைமையில், காவலா்கள் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தி, உடல் அடக்கம் செய்தனா். உயிரிழந்த காவலா் ராஜேஷ்கண்ணாவுக்கு மனைவி செல்வி (24), 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →