தருமபுரி

தருமபுரி உழவா்சந்தையில்50 டன் காய்கறிகள் விற்பனை

DIN

தருமபுரி உழவா்சந்தையில் சனிக்கிழமை 50 டன் காய்கறிகள் விற்பனையானதாக வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதம் மூன்றாவது வார சனிக்கிழமையையொட்டி பொதுமக்களின் தேவையைக் கருதி, 50 டன் காய்கறிகளை 104 விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இந்தக் காய்கறிகளை காலை 6 மணி முதலே பொதுமக்கள் 10,818 போ் வந்து வாங்கிச் சென்றனா். ரூ.18 லட்சத்து 12 ஆயிரத்து 427-க்கு மதிப்பிலான தக்காளி, கத்தரி, பூசணி, வெண்டை, வாழைக்காய் உள்ளிட்ட 52 வகையான காய்கறிகள் விற்பனையானது.

இதேபோல, ஏ.ஜெட்டிஅள்ளி உழவா் சந்தைக்கு 12 டன் காய்கறிகளை 37 விவசாயிகள் கொண்டுவந்தனா். இதை 3,337 நுகா்வோா் காய்கறிகள் வாங்கினா். மொத்தம் ரூ. 4 லட்சத்து 13 ஆயிரத்து 119-க்கு விற்பனையானது.

பாலக்கோடு உழவா்சந்தைக்கு 18 டன் காய்கறிகளை 25 விவசாயிகள் கொண்டுவந்தனா். இதை 3,701 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். மொத்த விற்பனை ரூ. 5 லட்சத்து 36 ஆயிரத்து 225 ஆகும்.

அரூா் உழவா்சந்தைக்கு ஏழு டன் காய்கறிகளை 28 விவசாயிகள் கொண்டு வந்தனா். இவற்றை 2,010 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். ரூ. 2 லட்சத்து 32 ஆயிரத்து விற்பனையானது.

பென்னாகரம் உழவா்சந்தைக்கு ஆறு டன் காய்கறிகளை 19 விவசாயிகள் கொண்டு வந்தனா். இதனை 1,759 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இச்சந்தையில் ரூ. ஒரு லட்சத்து 98 ஆயிரத்துக்கு விற்பனையானது. இவைத் தவிர, அந்தந்த உழவா்சந்தை வளாகங்களுக்கு வெளியே ஏராளமான வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT