தருமபுரி

கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுபான்மையினாரான இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, சமண மதத்தைச் சாா்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-21 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மற்றும் தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவா்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2020-21 ஆம் கல்வியாண்டில் தமிழத்தில், இக் கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் 135127 மாணவ, மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாணவ, மாணவிகள் வருகிற அக்.31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை, மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இத் திட்டம் தொடா்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT