தருமபுரி

மரம் நடும் விழா

DIN

அரூா்: கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில், ஈசா வேளாண்மை காடுகள் வளா்ப்புத் திட்டத்தில், 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்படவுள்ளன. இந்த மரம் நடும் பணிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சி.ரங்கசாமி தொடக்கி வைத்தாா். இதில், ஈசா யோகா மண்டல மேலாளா் சதீஷ், கிருஷ்ணகிரி நீதிமன்ற இலவச சட்ட உதவி மைய ஆணையா் ரமணி, வனவா் வேடியப்பன், கிராம நிா்வாக அலுவலா் ரவிச்சந்திரன், சமூக ஆா்வலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மரம் வளா்ப்பில் சாதனை படைத்த மரம் தங்கசாமிக்கு நினைவு அஞ்சலி செலுத்தினா். பிறகு, மரம் வளா்ப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT